"ஒரு 'ட்வீட்' போட்டுட்டு ஒளிஞ்சவரு தானே நீங்க"... சும்மா எங்கள உரசி பாக்காதீங்க!!,.. 'அமைச்சர்' ஜெயக்குமார் பரபரப்பு 'பேட்டி'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று காரணமாக, பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், விநாயக சதுர்த்தி விழா நடத்த வேண்டும் என பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சென்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக, எச். ராஜா தனது ட்விட்டர் பதிவில், 'கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு' என பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் எச். ராஜாவின் பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கொரோனா தொற்று காலம் என்பதால் தான் தொற்று பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அதிமுகவினரை எச். ராஜா உரசி பார்க்கக்கூடாது. எச். ராஜா பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு ட்வீட் போட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் ஆண்மை உள்ளவர்களா?, அட்மின் ட்வீட் போட்டார் என்று அவர் சொன்னது ஆண்மையுள்ள செயலா?, நீதிமன்றத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்டது ஆண்மை உள்ள செயலா?. அந்த சொல் அவருக்கு தான் பொருந்தும். அவர் வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையினரை ஏமாற்றி வருகின்றார்' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்