குறட்டை விட்டால் கொரோனா வருமா..? கொரானாவுக்கும், குறட்டைக்கும் சம்பந்தம் இருக்கா.? மருத்துவர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குறட்டை விட்டால் கொரோனா வருமா என நுரையீரல் சிறப்பு மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் சளித்தொல்லை, நுரையீரல் பலவீனமானவர்களுக்குத்தான் குறட்டை வரும் என்றும், அந்த நபர்களுக்கு எளிதாக கொரோனா தொற்று ஏற்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து தெரிவித்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமன், குறட்டைக்கும் கொரோனாவுக்கு எந்த தொடர்பு இல்லை. குறட்டை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்பது வதந்தி என தெரிவித்துள்ளார். குறட்டை என்பது சுவாசப்பாதை குறுகலாவதால் ஏற்படும். சிலருக்கு சளித்தொல்லையால் குறட்டை வரும், பெரும்பாலான நபர்களுக்கு சிலீப் அமினியா என்ற நோயால் குறட்டை ஏற்படும். குறட்டைக்கும், கொரோனாவுக்கு நேரடி தொடர்பு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
News Credits: Polimer News