தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றிருந்தது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.
வாக்குப்பதிவு முடிவின் போது, மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று காலை சுமார் 8 மணி முதல், ஓட்டு எண்ணிக்கை தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதிலும், 279 மையங்களில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில், திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
தொடர்ந்து, பல இடங்களில் தேர்தல் முடிவுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், சத்தியமங்கலம் நகராட்சி, 8 ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர் உமா, ஒரு வாக்கு வித்தயாசத்தில், திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த 'சர்கார்' திரைப்படத்தில், ஒரே ஒரு வாக்கின் மூலம், முடிவு மாறியதை பற்றி சில வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், தற்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஒரு வாக்கு அதிகமாக பெற்று, பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்