'18 மாநிலங்களில் நடந்த ஆய்வு'.. 'ஆனால் தமிழ்நாடுதான் முதலிடம்'.. 'மாஸ்' காட்டிய 'ரிப்போர்ட்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிர்வாகத் திறன், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது உள்கட்டமைப்பு ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி சர்வதேச நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

'18 மாநிலங்களில் நடந்த ஆய்வு'.. 'ஆனால் தமிழ்நாடுதான் முதலிடம்'.. 'மாஸ்' காட்டிய 'ரிப்போர்ட்'!

இதையொட்டி  இந்திய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 18 பெரிய மாநிலங்களில் மத்திய நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு நிர்வாகத்திறனில் (state of governance) முதலிடம் பெற்றுள்ளது.  இதேபோல் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் (judicial and public security) பொது உள்கட்டமைப்பிலும் (public infrastructure) தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் பொது சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியலில் (public health) கேரளா முதலிடத்திலும், தமிழகம் 2-ஆம் இடத்திலும், விவசாயம் மற்றும் அதுசார்ந்த துறை தொடர்பான (agriculture and allied sector) தரவரிசையில் 9-ஆம் இடத்திலும், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் (commerce and industries) தொடர்பான தரவரிசையில் 14-வது இடத்திலும், மனிதவள மேம்பாட்டுத்துறையில் (human resource development) 5-ஆம் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

STATE OF GOVERNANCE