'சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில்...' 'ரூ.3000 கோடி மதிப்பில் குடிநீர் வசதி திட்டம்...' - தமிழக அரசு அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் சுமார் ரூ.3,000 கோடி செலவில் 6 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு திட்டம் போட்டுள்ளது. 

'சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில்...' 'ரூ.3000 கோடி மதிப்பில் குடிநீர் வசதி திட்டம்...' - தமிழக அரசு அறிவிப்பு...!

வரும் 5 ஆண்டுகளில் சென்னையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், மழை நீர் மற்றும் வெள்ள நீரை சேமிக்கும் வகையிலும் நீர்வளத்துறை அமைச்சகம் சுமார் ரூ.3,000 கோடிக்கு இந்த திட்டத்தை வகுத்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்திற்கு உலக வங்கியிடம் கடன் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையின் கடந்த நான்கு ஆண்டுகளில் நீர் கிடைப்பது மற்றும் சராசரி மழைப்பொழிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டும், பேசின் ஆய்வின் அடிப்படையிலும் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக  நீர்வளத்துறை (water resources department) அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நீர்நிலைகள் மற்றும் நீர்வழிகளின் மேற்பரப்புகளின் நீர் இருப்பு திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தவிர, நிலத்தடி நீரை அதிகரிப்பதில் நீர்வளத்துறை கவனம் காட்டுகிறது.

மேலும் இதுகுறித்து கூறிய நீர்வளத்துறை அதிகாரி 'சென்னை நகரத்தை சுற்றி 60 நீர்நிலைகளின் சேமிப்பு திறனை மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். நீர்நிலைகளில் மாசுபாட்டைக் குறைக்க தேவையான  செயல்முறைகள் உடனே தொடங்கப்படும். அடுத்த 30 ஆண்டுகளுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். மேலும் உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவில் சுமார் 30% முதல் கட்டத்தில் வெளியிடப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் ஒரே கட்டமாக ஐந்து ஆண்டுகளில் முடிக்கப்படும்' என நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்