"இனி தனியார் பரிசோதனை கூடங்களில்... கொரோனா பரிசோதனைக்கு ஆகுற செலவு இவ்ளோதான்"!.. 'அமைச்சர்' விஜயபாஸ்கர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அரசு சார்பில் 43 கொரோனா பரிசோதனை கூடங்களும், தனியார் மருத்துவமனை சார்பில் 29 கொரோனா பரிசோதனை கூடங்களும் உள்ளன.
தனியார் பரிசோதனை கூடங்களை பொருத்தவரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த கட்டணம் 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து, கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தனியார் மருத்துவ பரிசோதனை கூடங்களில் இனி 3 ஆயிரம் ரூபாயில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கு 2,500 ரூபாய் கழித்துக் கொள்ளப்படும் என்றும், அந்த தொகை அரசால் வழங்கப்பட்டு விடும் என்றும் இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் அமைச்சர் மற்றும் மருத்துவர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வார்டினை ஆய்வுசெய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
மற்ற செய்திகள்