“அரை மணி நேரத்துல 7 பேர்!”.. கொரோனாவை எதிர்க்க, சாத்தியமானது தமிழக அரசின் “அடுத்த முயற்சி!”.. அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி இது என்பதும் இந்தியளவில் இது 2வது வங்கி என்பதும், கொரோனாவில் இருந்து மீண்ட, 18 - 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு இங்கு பிளாஸ்மா தானம் வழங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசியுள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், “தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் ஆதரவுடன் கொரோனாவுக்கு எதிரான பிளாஸ்மா சிகிச்சை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, முதல் பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மாவை கொடையாக பெறுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்ய கூடாது. பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரை காப்பாற்ற, பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோவிட் பிளாஸ்மா வங்கிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான, பரமக்குடி, அதிமுக எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன், பிளாஸ்மா தானம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்