'கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை'... தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசு சார்பில் புதிய டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

'கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை'... தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி திட்டம்!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி கேட்டும், படுக்கை வசதி கேட்டும் தினந்தோறும் ஏராளமானோர் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளனர். ’மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளை நோயாளிகளுக்கு அளிப்பதை நிர்வகிக்கும் சிறப்பு மையமாக இது செயல்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக @104‌‌GoTN ‌‌‌‌‌‌‌என்ற டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

TN govt launches UCC, new twitter handle for COVID management

இந்த டிவிட்டர் வசதியைப் பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படுக்கைகள் கிடைப்பது தொடர்பாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்