'மறக்க முடியாத அதிகார மையம் போயஸ் கார்டன்'... 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் அரசுடைமையானது'... அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம், அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

'மறக்க முடியாத அதிகார மையம் போயஸ் கார்டன்'... 'மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் அரசுடைமையானது'... அதிரடி நடவடிக்கை!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தின் அதிகார மையமாக விளங்கியது, சென்னையின் மையப் பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன். அங்கு தான் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அமைந்துள்ளது. இதனிடையே ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் இல்லத்தை அரசுடைமையாக்குவது எனத் தமிழக அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் அதற்கான இழப்பீடு தொகையாக ரூ.68 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியதால் வேதா நிலையம் அரசுடைமையானது, எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அரசுடைமையாக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் ஒரு பகுதியில் முதல்வர் முகாம் அலுவலகம் அமைக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்