“ரேஷன் கடைகளில் 19 மளிகை பொருட்கள் ரூ.500க்கு!”.. லிஸ்ட்ல என்னெல்லாம் இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம், கடுகு, வெந்தயம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ. 500-க்கு விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளது தமிழக அரசு. வெளிச்சந்தையில் 597 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பொருட்கள் கைப்பையுடன் சேர்த்து ரேஷன் கடைகளில் 500 ரூபாய்க்கு தரப்படுவதாக
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 19 வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பை ரூ.500க்கு விற்பனை செய்ய அரசு முடிவு. #Corona #CoronaAlert #CoronaVirusUpdates #CoronaAwareness #TamilNadu pic.twitter.com/fosOTWK5jn
— Jaya Plus (@jayapluschannel) April 10, 2020
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்கும் வகையிலும் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.