'அரியர்'க்கு அப்ளை பண்ணா 'பாஸ்',,.. அறிவித்த தமிழக 'அரசு',,.. 'பேனர்' வைத்த 'இளைஞர்கள்'... அதோட 'caption' தான் 'ஹைலைட்'டே... வைரலாகும் 'புகைப்படம்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று காரணமாக, தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தது. அதே போல, இறுதியாண்டு கல்லூரி மாணவர்களை தவிர அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வுகளில் வெற்றி பெற்றதாகவும் அறிவித்திருந்தது.

'அரியர்'க்கு அப்ளை பண்ணா 'பாஸ்',,.. அறிவித்த தமிழக 'அரசு',,.. 'பேனர்' வைத்த 'இளைஞர்கள்'... அதோட 'caption' தான் 'ஹைலைட்'டே... வைரலாகும் 'புகைப்படம்'!!!

இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும், தேர்வு எழுத கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு, ஈரோடு மாவட்டம் அருகே கொல்லம்பாளையம் பகுதியில் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பேனர் ஒன்றை வைத்துள்ளனர். மேலும், அந்த பேனரில் 'அரியர் மாணவர்களின் அரசனே', நீர் வாழ்க, வாழ்க' என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்