Breaking: நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா...? - தமிழக அரசு புதிய உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
நவம்பர் 16-ல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்துள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு பின்னர் முடிவு செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் 9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முதுநிலை மாணவர்களுக்கு டிசம்பர் 2-ஆம் தேதி முதல் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், முதுநிலை இறுதியாண்டு அறிவியல்&தொழில்நுட்ப கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும் எனவும், 100 நபர்களுக்கு மிகாமல் அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூக, பொழுதுபோக்கு, கலாச்சார, கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்