'500 கோடி' செலவில் மாணவர்களுக்கு.. லஞ்சோடு, 'டிபனை'யும் வழங்க.. புதிய திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது அரசு மதிய உணவு முட்டையுடன் வழங்கி வருகிறது. இந்தநிலையில் மாணவர்கள் நலன் கருதியும், அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் விதமாகவும் காலை டிபனை வழங்க அரசு திட்டம் தீட்டி வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சிறந்த சமையல்காரர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு காலை உணவாக இட்லி, பொங்கல், சப்பாத்தி ஆகியவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புரோட்டீன், மற்றும் கலோரி அளவை ஆய்வு செய்து உணவு வழங்கப்படும். கூடுதலாக பழம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.காலை உணவு திட்டத்தையும் செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.500 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
என்றாலும், இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு பள்ளி மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்லாமல் தடுக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.