'மாணவர்களே ரெடியா'?... 'பள்ளிகளை திறப்பது எப்போது'... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

'மாணவர்களே ரெடியா'?... 'பள்ளிகளை திறப்பது எப்போது'... தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

TN extends lockdown till Aug 23, schools to reopen for Class 9 onwards

அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்