ஒரு ஒட்டு கூட வாங்கல.. சிவகங்கை மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு வந்த சோதனை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஒரு ஒட்டு கூட வாங்கல.. சிவகங்கை மக்கள் நீதி மய்ய வேட்பாளருக்கு வந்த சோதனை..!

பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

தபால் ஓட்டுகள்

வாக்கு எண்ணிக்கையின் முதற் கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும். இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் 'சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.

மக்கள் நீதி மய்யம்

நடிகர் கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தனித்து களம் காண்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, பல இடங்களுக்கு சென்ற கமலஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

ஒரு வாக்கு கூட பெறவில்லை

இந்நிலையில், சிவகங்கை நகராட்சி வார்டு 1 ல் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஒரு ஒட்டு கூட பெறவில்லை. இதனால் சிவகங்கை மக்கள் நீதி மய்ய கட்சியினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

முதல் வெற்றி

முன்னதாக, இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருவாரூர் நகராட்சியின் முதல் வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு இரண்டாவது வெற்றி.. குஷியில் விஜய் ரசிகர்கள்..!

TAMILNADU ELECTION RESULTS, SIVAGANGAI, MAKKAL NEEDHI MAIYAM, MNM, KAMAL HAASAN

மற்ற செய்திகள்