திமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை..? யாருக்கு முன்னிலை அதிகம்..? வெளியான விவரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

திமுக-அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை..? யாருக்கு முன்னிலை அதிகம்..? வெளியான விவரம்..!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிவடைந்ததை அடுத்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி திமுக 146 தொகுதிகளிலும், அதிமுக 87 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 இடத்திலும் முன்னிலை பெற்று வருகின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்ட தொகுகளில் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி 234 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்தது தேர்தலை சந்தித்தன. அதில் திமுக நேரடியாக 173 தொகுதிகளிலும், அதிமுக 179 இடங்களிலும் போட்டியிட்டன. மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் திமுக 125 இடங்களிலும், அதிமுக 82 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அதேபோல் திமுக சின்னத்தில் 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. அதில் 3 இடங்களில் அக்கட்சிகள் முன்னிலை பெற்று வருகின்றன. அதிமுக சின்னத்தில் 12 தொகுதிகளில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்