தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக

1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு வேண்டி இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில், மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணி முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதற் கட்டமாக, தபால் ஓட்டுகள் என்னும் பணி தொடங்கியது. அவை முடிவடைந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெருவாரியான இடங்களில், திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதே போல, சேலம் மாநகராட்சியிலும், திமுக வேட்பாளர்கள், சில வார்டுகளில் வெற்றியினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர், 23 ஆவது வார்டிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கட்சியின் வேட்பாளராக களம் கண்ட சிவகாமி அறிவழகன், 3,694 வாக்குகள் பெற்று, சுமார் 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கட்சி உறுப்பினர்கள் பலரும், பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்

EDAPPADI PALANISWAMI, TN LOCAL BODY ELECTION, TN ELECTION RESULTS, DMK, ADMK, EDAPPADI

மற்ற செய்திகள்