‘பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை’!.. திமுக, அதிமுக எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் உள்ளிட்ட 5 மாநில மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் 5 மாநிலத்திலும் இன்று வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளில், 118 இடங்களுக்கு மேல் பெரும் கட்சியே ஆட்சியை அமைக்கும். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக 124 இடங்களிலும், அதிமுக 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேவேளையில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
அதேபோல் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமியும், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும், போடி நாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வமும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்