“11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றமா?”!.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

11 மற்றும் 12 ஆம் வகுப்புக்குகளுக்கான தேர்வு மதிப்பெண்களில் அடுத்தாண்டு முதல் மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வலம் வந்தன.

“11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாற்றமா?”!.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டு 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மீண்டும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து தமிழக அரசிடம் அரசாணை பிறப்பிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் பரவின. இதில், 10 ஆம் வகுப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் தற்போது  நடைமுறையில் இருக்கின்ற ஒன்றாம் தாள் மற்றும் இரண்டாம் தாளை நீக்கி ஒரே பாடமாக தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில், மாணவர்கள் இனி ஏதாவது ஒரு பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், இதன்மூலம் தற்போது, 600 மதிப்பெண்களுக்கு நடக்கின்ற பொதுத்தேர்வு அடுத்தாண்டு முதல் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், பொதுத்தேர்வு முறையில் நடைமுறைபடுத்தவிருக்கும் புதிய தேர்வு முறை குறித்த அறிவிப்பை அரசாணையாக வெளியிட தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளதாக வெளியாகிய தகவல்கள் உண்மை அல்ல என்றும் அதுபற்றிய எந்தவொரு அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொலைக்காட்சி பத்திரிகையாளர் சந்திப்பில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

TN CLASS 10TH, 11TH, 12TH, BOARD EXAM