‘அந்த ஒரு அறிவிப்பு’!.. ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் விண்ணப்பம்.. முடங்கியது ‘இ-பதிவு’ தளம்.. தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் சுமார் 60 லட்சம் பேர் இ-பதிவுக்கு விண்ணப்பித்ததால், அந்த இணையதளம் முடங்கியது.

‘அந்த ஒரு அறிவிப்பு’!.. ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் விண்ணப்பம்.. முடங்கியது ‘இ-பதிவு’ தளம்.. தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7-ம் தேதி (இன்று) வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

TN e-Registration site crashes due to heavy traffic

இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர்கள், தச்சர் போன்ற சுயதொழில் செய்யும் பலரும் தங்களது பணிகளை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில், சுயதொழில் செய்வோர் இ-பதிவு செய்துகொண்டு பணிக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN e-Registration site crashes due to heavy traffic

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோர் இ-பதிவுக்கு விண்ணப்பிக்க முயன்றனர். சுமார் 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் இ-பதிவு செய்ய முயன்றதால் அந்த இணையதளம் முடங்கியுள்ளது.

TN e-Registration site crashes due to heavy traffic

இதுகுறித்து தெரிவித்த தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ‘ஊரடங்கு தளர்வுகளால் 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முயன்றனர். இதனால் இ-பதிவு தளம் முடங்கியது. இன்று மாலைக்குள் இ-பதிவு இணயதளம் சரி செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்