'அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும்போது'.. திமுக தொண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்.. பரபரப்பான சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அருப்புக்கோட்டையில் திமுக இளைஞரணியினர், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும்போது'.. திமுக தொண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்.. பரபரப்பான சம்பவம்!

கடந்த சில நாட்களாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவை விமர்சித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இதனைக் கண்டித்து, விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக இளைஞரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ உருவபொம்மையை எரிக்க முற்பட்டபோது திமுக தொண்டர் ரஜினிகாந்த் என்பவருக்கு கால்களில் தீப்பற்றி தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் காயத்துடன் உயிர் தப்பினார். அந்த காயத்துக்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மற்ற செய்திகள்