'என் கண்ணு முன்னாடியே... என் கூட இருந்தவங்க அடுத்தடுத்து இறந்தாங்க!.. சாவ நேர்ல பாத்த நான் சொல்றேன்... தயவு செஞ்சு'... 21 வயதில் கொரோனா ICU Ward அனுபவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா உயிர்க்கொல்லி தமிழகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், நோய் தொற்றுக்கு ஆளாகி ICU Ward வரை சென்று திரும்பிய ஒரு 21 வயது இளைஞர், தன்னுடைய கொரோனா அனுபவங்கள் குறித்து Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

'என் கண்ணு முன்னாடியே... என் கூட இருந்தவங்க அடுத்தடுத்து இறந்தாங்க!.. சாவ நேர்ல பாத்த நான் சொல்றேன்... தயவு செஞ்சு'... 21 வயதில் கொரோனா ICU Ward அனுபவம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயது வரம்பின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உயிர் பயத்தை காட்டி வருகிறது இந்த வைரஸ்.

இதற்கிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டால், உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அதன் வீரியம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் எழலாம். மேலும், கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அரசு மருத்துவமனைக்குச் செல்வதா? தனியார் மருத்துவமனைக்குச் செல்வதா? என்ற கேள்வியும் நம்மைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கும்.

இவை அனைத்தையும், நோய் தொற்றுக்கு உள்ளாகி, ICU Ward-இல் சிகிக்சை பெற்று, வீடு திரும்பியுள்ள 21 வயது இளைஞர் ஒருவர், கொரோனாவுக்கு எதிரான போரில் ஏற்பட்ட அனுபவங்களையும், நினைவலைகளையும் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி மூலம் விளக்கியுள்ளார்.

'கொரோனா தான வந்தா பாத்துக்கலாம்' என்று மெத்தனமாக சிலர் இருப்பதை நாம் காண்கிறோம். உண்மையில், கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் எவ்வளவு கடுமையாக போராடுகிறார்கள் என்பதை தன்னுடைய அனுபவத்தின் மூலம் நம் கண்முன்னே இவர் திரைபோட்டுக் காட்டியுள்ளார்.

காணொளிக்கான இணைப்பு கீழே...

 

மற்ற செய்திகள்