"23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்றுஒரேநாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224ஆக உயர்ந்துள்ளது.

"23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்தை கடந்தது.  இதனிடையே சென்னை தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1141 ஆக உயர்ந்ததாகவும், இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

இதேபோல் கொரோனாவில் இருந்து இதுவரை 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்