'இந்தியா'லயே நாம தான் 'ஃபர்ஸ்ட்'... வீட்டில் 'தனிமை'யில் உள்ளவர்களுக்காக... 'தமிழக' அரசு அறிவித்த 'அதிரடி' திட்டம்!!!... முழு 'விவரம்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு வேண்டி அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

'இந்தியா'லயே நாம தான் 'ஃபர்ஸ்ட்'... வீட்டில் 'தனிமை'யில் உள்ளவர்களுக்காக... 'தமிழக' அரசு அறிவித்த 'அதிரடி' திட்டம்!!!... முழு 'விவரம்' உள்ளே...

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறது. இதுவரை நடமாடும் பரிசோதனை முகாம், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், வீட்டுத்தனிமையில் கீழ் உள்ளவர்களை கண்காணிக்க வேண்டி 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கிருமி நாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் 2500 ரூபாய் கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

மேலும், கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டி, எல்இடி வீடியோ வாகனங்களின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். மண்டலத்திற்கு தலா 2 வாகனம் என 15 மண்டலங்களுக்கு 30 எல்இடி வீடியோ வாகனங்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதே போல, மேலும் சில திட்டங்களையும் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்