தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் : 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்று (23-05-2020) மட்டும் சுமார் 759 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 624 பேருக்கு கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர்
இன்று உறுதி செய்யப்பட்ட 759 பேரில் 710 பேர் தமிழகத்தை சேர்த்தவர்கள். மேலும் மகாராஷ்டிராவை சேர்ந்த பேருக்கும், ராஜஸ்தானை சேர்ந்த 6 பேருக்கும், மேற்கு வங்கத்தை சேர்ந்த மூவருக்கும், தெலுங்கானா உத்தரபிரதேசம் ஆந்திர பிரதேசம் மற்றும் டெல்லி மாநிலதவர்கள் வீதம் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் லண்டனை சேர்ந்த ஒருவருக்கும், பிலிப்பைன்ஸ் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 759 பேரில் 429 ஆண்களும், 330 பெண்களும் என்ற எண்ணிக்கையையும் வெளியிட்டுள்ளனர். மேலும் இன்று 363 பேர் உடல் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக சுமார் 7491 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
இன்று வரை கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 3,97,340 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுமட்டும் சுமார் 12,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
இன்று பாதித்த 759 பேரை சேர்ந்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,512 ஆகும்
மற்ற செய்திகள்