சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது...! 'இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா...' இன்றைய முழு விபரம் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (27-06-2020) ஒரே நாளில் 3713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 3713 பேரில் 3624 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 89 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,213 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,939 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 2737 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப்பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 45 பேர், தனியார் மருத்துவமனையில் 23 பேர் என 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை சுமார் 10,25,059 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் இன்று மட்டும் சுமார் 32,068 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்படைந்த 78,335 பேரில் ஆண்கள் 48,346, பெண்கள் 29,968 மற்றும் வேற்றுப்பாலினத்தவர் 21 ஆக உள்ளது.
மற்ற செய்திகள்