'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' இன்னும் கூடுதல் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (06-06-2020) சுமார் 1458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7வது நாளாக தொடர்ந்து கொரோனா உறுதி செய்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1146 ஆக அதிகரித்து, மொத்தம் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவிய நாள் முதல் இன்று வரை பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 30,152 ஆகவும் இதில் 16395 பேர் சிகிச்சை பெற்று வீடு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 19 பேர் சேர்த்து இதுநாள் வரை தமிழகத்தில் பலி எண்ணிக்கை 251 ஆகும். நல்ல செய்தியாக இன்று சுமார் 633 கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்ததை வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்