தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை .. 116 பேர் பலி!! முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று (ஆகஸ்டு 20,2020) ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும் 6 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை .. 116 பேர் பலி!! முழு விபரம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,177 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததை அடுத்து இதுவரை சென்னையில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,21,450ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், இன்று ஒரே நாளில் 5,742 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 53,283 ஆக உள்ளது.

தவிர, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,239 ஆக உயர்ந்துள்ளது.

 

மற்ற செய்திகள்