"ஒரே நாளில் 37 பேர் பலி!".. இன்று 'தமிழகத்தில்' கொரோனா பாதித்தவர்கள் 'முழு விபரம்!'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு, தமிழக முதலைமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மட்டும் ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை மொத்தமாக 794ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே இன்று மட்டும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1358 ஆகவும், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 112 ஆக உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்