"எங்க ஓட்டு உங்களுக்கு தான்!"... ’பல 'ஹைலைட்' வசனங்களுடன் 'போஸ்டர்', 'பேப்பர்' விளம்பரம்...’ - 'தமிழக' முதல்வரை புகழ்ந்து தள்ளிய கல்லூரி 'மாணவர்கள்'!!! - Posters Inside

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடெங்கிலுமுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

"எங்க ஓட்டு உங்களுக்கு தான்!"... ’பல 'ஹைலைட்' வசனங்களுடன் 'போஸ்டர்', 'பேப்பர்' விளம்பரம்...’ - 'தமிழக' முதல்வரை புகழ்ந்து தள்ளிய கல்லூரி 'மாணவர்கள்'!!! - Posters Inside

இந்நிலையில், கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் தவிர மற்ற தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அத்துடன், அரியர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருக்கும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

tn college students poster thanking cm eps for sem exam cancel

இதனையடுத்து, கல்லூரி படிப்பை முடித்தும் அரியர் உள்ளதன் காரணமாக, பல வருடங்களாக அரியர் தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்களை தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி கடலில் திளைக்க செய்தது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பல இடங்களில் மாணவர்கள் பேனர்களை வைத்து வருகின்றனர். அதே போல சில மாணவர்கள், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

tn college students poster thanking cm eps for sem exam cancel

இது அனைத்தையும் விட, ஒரு படி மேல போய் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு தமிழ் பத்திரிக்கை ஒன்றில், ஒரு பக்க விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 'மாணவர்களின் மனிதக் கடவுளே' என்றும், 'எங்கள் ஓட்டு எங்களுக்கே' என்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையதளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றது.

மற்ற செய்திகள்