'குழந்தைக்கு பெயர் வைக்குமாறு...' 'முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த தொண்டர்...' மைக்ல 'அந்த' பெயர சொன்னப்போ... 'ஒரு நிமிஷம் அந்த இடமே அதிர்ந்து போற அளவுக்கு...' - ஆர்ப்பரித்த பொதுமக்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தல் பரப்புரை நாளை மாலை முடிவடைகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல கட்டங்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தங்கள் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு வருகிறார். பொதுமக்களும் அவரை காண கடலலை போல் திரண்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் தாங்கள் செய்த சாதனைகளையும், செய்ய போகிற நலத்திட்டங்களையும் விளக்கி கூறுவதால் அவர் தொண்டை கட்டி குரல் மாறியது. ஆயினும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தங்கள் வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொண்டார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர். மணியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பரப்புரையில் இருந்த ஒருவரது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு முதல்வரிடம் தொண்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். தொண்டரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரச்சார வேனில் இருந்து அந்த பெண் குழந்தையை தூக்கிய முதலமைச்சர் குழந்தையை கொஞ்சினார்.
பின்னர் குழந்தைக்கு 'ஜெயலலிதா' என பெயர் வைத்தார். பெயரை அவர் மைக்கில் அந்த பெயரை சொல்லி வைத்தபோது அந்த இடமே அதிர்ந்து போகும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்து மகிழந்தனர்.
மற்ற செய்திகள்