'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து முடிக்க தீவிரம் காட்டியுள்ளது.

'தயாராகும் தேர்தல் அறிக்கை...' 'தேர்தல் பணிகள் குறித்து...' - தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆலோசனை...!

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும், வேகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தவிர, மற்ற இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி ஓரளவு முடிந்துவிட்டது.

இதற்காக தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி மன்ற குழுவுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்கள்.

                                       

தற்போது தேர்தல் அறிக்கை அச்சிடப்பட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்பட்டுள்ளதால், அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் சென்று பிரசாரம் செய்து வந்தார்.

                                        

இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல உள்ளனர்.

இந்த பிரசார வியூகம் குறித்து தலைமை கழகத்தில் இன்று இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். எந்தெந்த தேதிகளில் பிரசாரம் செய்வது, கூட்டணி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று விரிவாக விவாதித்துள்ளனர்.

மற்ற செய்திகள்