'ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்ய வலியுறுத்தி...' - மத்திய அரசிற்கு தமிழக முதல்வர் கடிதம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் மாநிலங்களின் ஜிஎஸ்டி வரியில் ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டை பூர்த்தி செய்ய வேண்டியது, மத்திய அரசின் கடமை என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜிஎஸ்டி இழப்பீட்டை செலுத்த மத்திய அரசிற்கு தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்
மேலும், மற்ற மாநிலங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு எந்தவித தடையும் இன்றி, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு மத்திய அரசு ஈடுசெய்யும் என்று அளித்த உறுதிப்பாட்டின்படி இந்த ஜிஎஸ்டி சட்டத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து மாநிலங்களுக்கு கிடைக்கப்பெறும் வருவாயில் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'ஜி.எஸ்.டி வரி தொடர்பான இழப்பீட்டை செலுத்த இந்திய அரசுக்கு தார்மீக மற்றும் சட்டபூர்வமான கடமை உள்ளது என்பதே எங்கள் நிலைப்பாடு. ஜி.எஸ்.டி வரியில் இழப்பீடு ஏற்பட்டால், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கு ஈடுசெய்ய, தேவையான நிதியை இந்திய அரசு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்துள்ளோம், ”என்று முதல்வர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்