“மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை!”.. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நகர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி, நாடு முழுவதும் விவாதங்களும் கருத்துக்களும் எழுந்து வருகின்றன.

“மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை!”.. புதிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அதிரடி நகர்வு!

குறிப்பாக மும்மொழி கொள்கை, புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருப்பது பற்றிய கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் புதிய கல்விக்கொளை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று (ஆகஸ்டு 3,2020) நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு உண்டானால், உடனடியாக அதனை களைய அரசு  நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு என்றுமே இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய்வதற்காக,  அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய ஒரு குழுவையும் அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட உள்ள இக்குழு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘தேசிய கல்விக் கொள்கை’யில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்