"தமிழ்நாட்டுல, 'கொரோனா' தொற்று கொறஞ்சுருக்கு... ஆனா பாராட்டத் தான் ஆளில்ல..." 'தமிழக' முதல்வர் கருத்து..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக திருவாரூர், கடலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

"தமிழ்நாட்டுல, 'கொரோனா' தொற்று கொறஞ்சுருக்கு... ஆனா பாராட்டத் தான் ஆளில்ல..." 'தமிழக' முதல்வர் கருத்து..

இந்நிலையில், இன்று பெரம்பலூர், அரியலூர் பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இந்தியாவிலேயே கொரோனா இறப்பு விகிதத்தை அதிகம் குறைத்த மாநிலம் தமிழகம் தான். கேரளா, டெல்லி மாநிலங்களை குறிப்பிட்டு பாராட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள். தமிழக அரசின் மீது திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த போது விமர்சித்தவர்கள் தற்போது தொற்று குறைந்துள்ளதை பாராட்டவில்லை' என தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் 6,300 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதையும் முதல்வர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் சுமார் 26 கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், சுமார் 36 கோடி ரூபாயில் 39 திட்டங்களை தொடங்கி வைத்தார். அது மட்டுமில்லாமல், 129 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்