"யாராலயும் என்ன விலைக்கு வாங்க முடியாது.. அடிமையா நடத்தவும் முடியாது..." தமிழக முதல்வர் அதிரடி 'கருத்து'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், 'வெற்றிநடை போடும் தமிழகம்' என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, ஜமாத் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அதில் பேசிய பழனிசாமி, 'அண்ணா கூறியது போல, 'பதவி என்பது தோளில் போட்டிருக்கிற துண்டு'. என்னை யாரும் விலை வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது. மதம், சாதி என்ற பெயரில் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் உரிமையை எங்கள் அதிமுக அரசு பாதுகாக்கும்.
குடும்பத்தில் ஒருவனாக இருந்து நான் சேவையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர். ஹஜ் பயண நிதியை மத்திய அரசு ரத்து செய்த போதும், அதிமுக அரசு அதனை ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கி வருகிறது' என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்