'விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு'... 'இனிமேல் பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்'... முதல்வர் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாய பயன்பாட்டு பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு'... 'இனிமேல் பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம்'... முதல்வர் அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், குடிமராமத்து பணியைப் பற்றிக் குறைகூறும் கனிமொழிக்கு விவசாயம் குறித்து என்ன தெரியும் எனக் கேள்வி எழுப்பினார். அதோடு பயிர்க்கடன் ரத்து உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், பம்பு செட்டுகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனத் தெரிவித்தார். இதனிடையே குறைகளை வீட்டிலிருந்தே தெரிவிக்க 1100 என்ற எண் குறித்து 2 மாதமாகச் சொல்லி வருவதாகவும், ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொன்னதால் நான் கூறுவதாகத் தவறான தகவலைப் பரப்புகிறார்கள் என்றும் முதலமைச்சர் கூறினார்.

மற்ற செய்திகள்