‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் 15 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

‘70 கோடி ரூபாய் மதிப்பில்’.. கள்ளக்குறிச்சியில் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த அதிரடி திட்டங்கள்!

அதுமட்டுமல்லாமல் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்பட உள்ள மேல்நிலைப்பள்ளிக்கான வகுப்பறைகள், அப்பள்ளியின் சுற்றுச்சுவர் அறிவியல் ஆய்வகம், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்களுக்கான விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் என 20 கோடியே 86 லட்சம் மதிப்பிலான 60 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அத்துடன் 15 ஆயிரத்து 16 பேருக்கு 31 கோடியே 36 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மற்ற செய்திகள்