'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

'முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள்'... முதலமைச்சர் பழனிசாமி மரியாதை!

தென்னாட்டு பெர்னாட்ஷா, சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மற்ற செய்திகள்