ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers .. பொம்மன், பெள்ளியை நேரில் பாராட்டிய முதல்வர்...! யானைகள் முகாமை சேர்ந்த 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது.

ஆஸ்கார் வென்ற The Elephant Whisperers .. பொம்மன், பெள்ளியை நேரில் பாராட்டிய முதல்வர்...! யானைகள் முகாமை சேர்ந்த 91 பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிப்பு!

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சகோதரர் ராஜமௌலி".. ஆஸ்கார் விருது பெற்ற RRR பட பாடல் குறித்து சீமான் ட்வீட்!  

இந்நிலையில் இந்த 95வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் விருது வென்ற தமிழ் ஆவண குறும்படம் The Elephant Whisperers தற்போது பேசுபொருளாகியுள்ளது. முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers' சிறந்த ஆவண குறும்பட பிரிவில் இப்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

ஆம், தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார் குனீத் மோங்கா. நெட்பிளிக்ஸ் ஆவணப்படமான இப்படம் 41 நிமிடங்கள் ஒளிபரப்பாகக் கூடியது. 2 குட்டி யானைகளை வளர்ப்பது தொடர்பான இவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு நிறைவடைகிறது.

இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியர்களை நேரில் அழைத்து பாராட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,  அவர்களுக்கு பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

TN CM MK Stalin Praises The Elephant Whisperers team

Images are subject to © copyright to their respective owners.

இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் பணி புரிந்து வரும் 91 பணியாளர்ளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

குறிப்பாக யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதியும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை மேம்படுத்த ரூபாய் 5 கோடி நிதியும், கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகளை பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு புதிய யானைகள் முகாமிற்காக 8 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN CM MK Stalin Praises The Elephant Whisperers team

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN CM MK Stalin Praises The Elephant Whisperers team

Images are subject to © copyright to their respective owners.

இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு இ.ஆ.ப., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., புலிகள் காப்பக கள இயக்குநர் து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Also Read | பிரபல கிரிக்கெட் வீரர் மகள் தான் நடிகை ராதிகா பேத்தியா..! வைரலாகும் CUTE புகைப்படங்கள்!

MK STALIN, THE ELEPHANT WHISPERERS, OSCARS 2023

மற்ற செய்திகள்