ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்.. முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற அண்ணாமலை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில்.. முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற அண்ணாமலை..!

                             Images are subject to © copyright to their respective owners.

இந்தியாவின் 74 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவியும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினும் கலந்துகொண்டனர்.

TN CM MK Stalin attended Governor Republic day Tea Party

Images are subject to © copyright to their respective owners.

குடியரசு தினத்தன்று பொதுவாக ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம்.. இதற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் இந்த முறை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன.

இந்நிலையில், திமுக இந்த விருந்தில் பங்கேற்குமா? என கேள்வி எழுந்திருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று தொலைபேசி வாயிலாக தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு தேநீர் விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி. இதனையடுத்து இன்று ஆளுனர் மாளிகை அமைந்துள்ள ராஜ் பவனுக்கு வருகைபுரிந்தார் முதல்வர் முக.ஸ்டாலின். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் மாளிகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறிது நேரம் ஆளுநர் ரவியுடன் உரையாற்றினார்.

TN CM MK Stalin attended Governor Republic day Tea Party

Images are subject to © copyright to their respective owners.

தேநீர் விருந்து நடைபெறும் அரங்கிற்குள் முதல்வர் ஸ்டாலின் நுழைந்தபோது அங்கே அமர்ந்திருந்த பாஜக கட்சியினர் அவரை வரவேற்றனர். அப்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வருடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே நடந்திருக்கும் இந்த விருந்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

CM, STALIN, GOVERNOR, RN RAVI, TEA PARTY

மற்ற செய்திகள்