cadaver Mobile Logo Top
Viruman Mobiile Logo top

"76-ஆவது விடுதலை நாள் விழா.." அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாட்டின் 76 ஆவது விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்ற வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதையை செய்து வைத்தனர்.

"76-ஆவது விடுதலை நாள் விழா.." அரசு ஊழியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடுத்த 'சர்ப்ரைஸ்'!!

இதனைத் தொடர்ந்து, தேசியக்கொடி ஏற்றி வைத்த முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக மக்களுக்கு உரை ஆற்றினார்.

அப்போது பேசிய முதல்வர் முக ஸ்டாலின், "எண்ணற்ற தியாகிகள் பெற்று தந்த விடுதலை இது. நாட்டையும், நாட்டு மக்களையும், ஒருமைப்பாட்டையும் வணங்குகிறோம். மூவர்ண கொடியை ஏற்றும்போது தமிழன் அடிப்படையில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது தமிழகம் தான். தமிழர்கள் பங்கு என்பது அளப்பரியது. சிப்பாய் புரட்சி தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்கின்றனர் சிலர். அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கியதுமே அதற்கு எதிர்ப்பை தெரிவித்தவர்கள் தமிழர்கள் தான். அதேபோல, போராட்டங்களால் ஆங்கிலேயர்களை மிரளச் செய்ததும் தமிழகம் தான்.

tn cm mk stalin announce 3 percent hike for government workers

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயருக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திலும் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றிருந்தனர். தியாகத்தை போற்றுவதில் திமுக அரசியல் எப்போதுமே முன்னாடி ஆகத்தான் உள்ளது. வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்று இணைந்து வாழ்வதை இந்தியாவை காக்கும்" என ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "அனைவரின் வளர்ச்சியும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். அனைவரும் அர்ச்சகராகும் சமூக நீதியும் நிலை நாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் கோரிக்கையும் நிறைவேற்றும் முதல்வராக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. போதைப்பொருள் ஒழிப்பிலும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

tn cm mk stalin announce 3 percent hike for government workers

அனைத்து மக்களின் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல முதலீட்டார்களின் முதல் முகவரியாகவும் தமிழகம் உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு நிதியும் வழங்கியது திமுக ஆட்சி. தியாகிகளுக்கான குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். தியாகிகளுக்கான ஒய்வூதியம், 20,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு அளிக்கப்படுகிறது. அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 ஆக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு உள்ள அரசு ஊழியர்கள், 16 லட்சம் பேர் வரை இதன் மூலம் பயனடைவார்கள். ஜூலை 01, 2022 முதல் கணக்கிட்டு கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும். சென்னையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்" என முதல்வர் ஸ்டாலின், 76 ஆவது சுதந்திர தின விழாவில் உரையாற்றி இருந்தார்.

tn cm mk stalin announce 3 percent hike for government workers

தொடர்ந்து, பலருக்கும் சுதந்திர தின விழா மேடையில், விருதுகளையும் முதல்வர் ஸ்டாலின் அளித்திருந்தார்.

MK STALIN, 76 TH INDEPENDENCE DAY, TAMILNADU

மற்ற செய்திகள்