'இந்தியாவிலேயே தமிழ்நாட்டுல தான் ஃபர்ஸ்ட்...' 'அறிமுகமாகும் அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டம்...' - இதன் பயன்கள் என்ன...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை காணொளி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் இக்கட்டான சூழலில் தமிழக அரசின் பல்வேறு துரித நடவடிக்கைகளால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இருப்பினும் அதன் பரவும் வீதம் அதிகரித்துக்கொண்டே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசும், மாநில அதிகாரிகளும் சேர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருவோருக்கு என ஒரு பிரத்யேக திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழக அரசு கொண்டு வரும் இந்த திட்டத்திற்கு 'அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டம்' என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை தமிழக முதல்வர், இன்று காணொளி மூலம் துவக்கி வைக்கவுள்ளார்.
அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மனநல ஆலோசகர்கள் உட்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழு வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளதாகவும், 14 நாட்கள் தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான முழு மருத்துவ உதவிகளும் இணைய வழியில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் மேலும், வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு அவசர உதவி தேவைபட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவசர ஊர்திகளும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்