‘பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு’... ‘21 வயது நிறைந்தால்’... 'முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர் அல்லாத ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் சில முக்கியத் திட்டங்களை இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார். அதில், `மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து பெற்றோர் இல்லாமல் வளரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சமூக - பொருளாதாரப் பாதுகாப்பு நலன் கருதி அதற்கான சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். அதில் ஆதரவற்று வளரும் பெண் குழந்தைகளுக்கு அவர்களுக்கு 21 வயது பூர்த்தி அடையும் போது 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற மற்றோர் அறிவிப்பையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள வளர்ப்பு பெற்றோருக்கான தொகை 4,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.