VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எம்ஜிஆரின் நினைவுநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர்.புகழை யாரும் தட்டிப்பறிக்க விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

VIDEO: 'தந்தை பெரியார், எம்ஜிஆர் நினைவு நாள்'... கருப்பு சட்டை அணிந்து... முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

அதிமுக நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 33ஆவது நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தனது இல்லத்தில், எம்ஜிஆர் புகைப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அனைவரும் எம்ஜிஆர் நினைவுநாள் உறுதிமொழி ஏற்றனர். எம்.ஜி.ஆர்.புகழை யாரும் தட்டிப்பறிக்க விடமாட்டோம், சிங்கமென தேர்தல் களத்தில் சீறி பாய்வோம், சிறு நரிகளை மிரண்டு ஓடச் செய்வோம், எதிரிகளின் பொய் முகத்தை மக்களுக்கு காட்டுவோம், மீண்டும் அதிமுக ஆட்சியமைக்க சபதமேற்போம் என வாக்குறுதி எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, "சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பதால், "சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

மற்ற செய்திகள்