"மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்!" - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!.. 'திமுக'வுக்கு பதிலடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் அரசு மருத்துவக்கல்லூரியில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்கள் தனியார் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, தனியார் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேலும், திமுகவின் அறிவிப்பு ஒரு 'அரசியல் நாடகம்' என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார்.
நான் 18.11.2020 அன்றே அறிவித்தவாறு, மாணாக்கர்களின் கல்வி, விடுதி செலவுகளையும் ஏற்று, அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி உள்ளது அம்மாவின் அரசு.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது "அரசியல் நாடகமே" என்பதை மக்கள் நன்கு அறிவர். pic.twitter.com/g9lqJXb6So
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 21, 2020
மற்ற செய்திகள்