'கொரோனா நேரத்திலும் சிக்ஸர் அடித்த தமிழகம்'... 'இந்திய அளவில் படைத்த சாதனை'... வெளியான புள்ளிவிவரங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாகப் பொருளாதார மந்தநிலை நிலவும் நேரத்திலும், இந்திய அளவில் மூன்றாவது ஆண்டாகப் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து தமிழகம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பான புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில், தேசிய சராசரி விகிதத்தை விடத் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு சராசரி எண்ணிக்கை 4.2 ஆக இருந்தது. ஆனால் தமிழகத்தின் செயல்திறன் 8.03 சதவிகிதமாக எனப் பதிவாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் தேசிய சராசரி எண்ணிக்கை விடத் தமிழகத்தின் செயல்திறன் இரண்டு மடங்கு அதிகமாகும்.
கடந்த 2018-19 ஆம் ஆண்டில், தமிழகம் 12வது இடத்திலிருந்த நிலையில், தற்போது அகில இந்திய அளவில் தமிழகம் 6வது இடத்தில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது அதை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாகப் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியான புள்ளி விவரங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடும் பொருளாதார மந்தநிலை நிலவும் நேரத்தில், தமிழக அரசின் சரியான திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
Tamil Nadu's economy has grown at twice the national rate. For the third consecutive year, the state has grown faster than the national average. We remain steadfast in our commitment to attract investment and expand economic opportunities which has led to this scenario! pic.twitter.com/42EqF5KBd9
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 7, 2020
மற்ற செய்திகள்