"ஆரம்பமே 'அமர்க்களம்' பண்ணிட்டீங்க 'தம்பி'... இன்னும் நெறய ஜெயிக்கணும்..." நடராஜனுக்கு வாழ்த்து சொன்ன 'தமிழக' முதல்வர்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முதல் முறையாக சர்வதேச போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியிலேயே, இரண்டு விக்கெட்டுகளை நடராஜன் வீழ்த்தி, தனது திறமையை நிரூபித்துள்ளார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் தனது திறனை வெளிக்காட்டி, பல தடைகளைக் கடந்து இன்று சர்வதேச அணிக்காகவும் களமிறங்கி முதல் போட்டியிலேயே முத்திரை பதித்துள்ளார். இவருக்கு தமிழகம் மட்டுமில்லாது உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND pic.twitter.com/tq8ScEWPSs
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 2, 2020
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நடராஜனுக்கு வாழ்த்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்