Kadaisi Vivasayi Others

என்கிட்டயே சவாலா- மெல்லிசாக ஊற்றி, அழகாக மடித்து.. மாஸ்டரிடம் தோசையை நீட்டிய அண்ணாமலை.. செம்ம கலகல!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் தோசை சுட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

என்கிட்டயே சவாலா- மெல்லிசாக ஊற்றி, அழகாக மடித்து.. மாஸ்டரிடம் தோசையை நீட்டிய அண்ணாமலை.. செம்ம கலகல!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர்.

பாஜக தனித்து போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, "அதாவது  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் கட்சியை பலப்படுத்த இது உதவியாக இருக்கும். மற்றபடி அடுத்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி தொடரும்" என்று தெரிவித்தார். அதன்படி பாஜகவினரும் தீவிரமாக பரபப்புரை செய்து வருகின்றனர்.

TN BJP leader Annamalai who shot Dosa and collected votes

வீடு வீடாக தேர்தல் பரப்புரை

சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில்,  நேற்று அதிகாலை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால் அண்ணாமலை காலையில் பரப்புரை மேற்கொள்ளவில்லை. இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதன்பின் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். இதன் பின்னர் சென்னை பாரீஸ் பகுதியில் அண்ணாமலை வார்டு வார்டாக சென்று மாலையில் இருந்து இரவு வரை பரப்புரை செய்தார்.

தோசை சுட்ட அண்ணாமலை

சென்னை வார்டு எண்:55-ல், நேற்று இரவு அவர் வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த உணவு கடை ஒன்றில் வாக்கு சேகரித்த போது கடை மாஸ்டர் அண்ணாமலைக்கு வித்தியாசமாக சவால் ஒன்றை விடுத்தார். அந்த கடைகாரர் அண்ணாமலையிடம்,  "நீங்க இங்க வந்து ஒரு நல்ல தோசை சுட முடியுமா? நல்ல ஒரு தோசையை நீட்டா சுட்டு காட்டுங்க. நான் உங்களுக்கு வாக்கு அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். இதை சவாலாக ஏற்றுகொண்ட அண்ணாமலை, தோசை கல்லை துடைத்து விட்டு தோசையை ஊற்றினார்.

TN BJP leader Annamalai who shot Dosa and collected votes

அண்ணாமலை ட்வீட்

மெலிசான தோசையை சுட்ட அண்ணமாலை, அதை அழகாக மடித்து மாஸ்டரிடம் எடுத்து கொடுத்து சாப்பிட சொன்னார். மாஸ்டரும் தோசைய சாப்பிட்டு முடித்துவிட்டு, நன்றறாக இருப்பதாக பாராட்டினார். இந்நிலையில், இதனை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்த அண்ணாமலை, "மாஸ்டர் எனக்கு சவால் விட்டபடியே நான் தோசை சுட்டுக்கொடுத்தேன். நான் கொடுத்த ஆவரேஜ் தோசையை சாப்பிட்டுவிட்டு மாஸ்டர் தம்ப்ஸ் அப் காட்டினார். அதோடு பாஜகவிற்கு சொன்னபடியே வாக்கு அளிப்பதாகவும் உறுதி அளித்தார்" பதிவிட்டுள்ளார்.

TN BJP leader Annamalai who shot Dosa and collected votes

ANNAMALAI BJP, BJP, ANNAMALAI, , DOSA, CHENNAI, URBAN LOCAL BODY ELECTION, ELECTION CAMPAIGN, TN BJP

மற்ற செய்திகள்