'இப்படி உருக வச்சிட்டியே தம்பி'...'ஒரே ஒரு 'லெட்டரில்' வைரலான மாணவன்'.. வைரலாகும் லெட்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தான் நேர்மையாக எழுதிய லீவ் லெட்டர் மூலம் பல நெட்டிசன்களை உருகவைத்துள்ளார் மாணவன் ஒருவன். அந்த மாணவனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

'இப்படி உருக வச்சிட்டியே தம்பி'...'ஒரே ஒரு 'லெட்டரில்' வைரலான மாணவன்'.. வைரலாகும் லெட்டர்!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன். ஆட்டோ ஓட்டுநரான  விஜயராகவனின் மகன் தீபக், மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படு சுட்டியான இவர்,  நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார். அதோடு பள்ளியில் சிறந்த மாணவனாகவும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல மாணவன் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவன் தீபக் தனது நேர்மையான செயல் மூலம் தற்போது பலரது பாராட்டையும் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுப்பு எடுத்த தீபக்,  தனது வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பிய விடுப்பு கடிதத்தில், ''தான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்தால் உடல் சோர்வாக உள்ளது. எனவே தனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டுமென கூறியுள்ளார். அதையடுத்து மாணவனுக்கு பள்ளி ஆசிரியரும் விடுப்பு அளித்துள்ளார்''

இதனைக்கண்ட வகுப்பாசிரியர் மணிமாறன் மாணவனை பாராட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் படித்த அனைவரும் நேர்மையாக விடுப்பு கடிதம் அளித்த மாணவனுக்கும், அப்பள்ளி ஆசிரியருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிறிய வயதில் நேர்மையுடன் செயல்பட்ட மாணவனை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

SCHOOLSTUDENT, STUDENTS, LEAVE LETTER, HONEST LEAVE LETTER, TIRUVARUR